கணைய அழற்சியின் விளைவுகள் மற்றும் தடுப்பு முறைகள்
கணைய அழற்சி என்பது கணையத்தில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது. பல காரணங்களால் உருவாகும் இந்நோய் பல அறிகுறிகளைக் கொண்டுள்ளது. இந்நோய்க்கு உடனடி மருத்துவச் சிகிச்சை அவசியமான ஒன்றாகும். சமிபாட்டிற்குத் தேவையான கணைய நொதிகள் (குறிப்பாக டிரிப்சின் நொதியம்) சிறுகுடலில் செயற்பாடடைவதற்குப் பதிலாகக் கணையத்திலேயே செயல்திறன்மிக்கதாக மாறிவிடுவதால் இந்நோய் உருவாகிறது. இது திடீரெனத் தோன்றிச் சில நாட்களே காணப்படும் தீவிரமான நோயாகவோ (acute pancreatitis) அல்லது பல வருடங்களாகக் காணப்படும் நாட்பட்ட நோயாகவோ (chronic pancreatitis) இருக்கும்.
அறிகுறிகளும் உணர்குறிகளும்
- மேல்வயிறு (epigastrium) அல்லது வயிற்றின் இடது மேற்புறம் கடுமையான எரிச்சல் தரக்கூடிய வலி முதுகுபுறமாகப் பரவுதல்
- குமட்டல்
- உணவு உண்டபின் மோசமாகும் வாந்தி
- வயிற்று வீக்கம்
- காய்ச்சல்
- வேகமான இதயத்துடிப்பு
- மஞ்சள் காமாலை
- எடை இழப்பு
கணையம் என்றால் என்ன?
கணையம் என்பது அடிவயிற்றில் ஆழமாக அமர்ந்திருக்கும் ஒரு தட்டையான சுரப்பி. இந்த முக்கிய உறுப்பு செரிமான மண்டலத்தின் மென்மையான செயல்பாட்டிற்குத் தேவையான பல்வேறு நொதிகள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்தியுடன் தொடர்புடையது.
கணைய அழற்சியின் வகைகள்
- கடுமையான கணைய அழற்சி: குறுகிய காலத்தில் குணமாகக்கூடியது.
- நாள்பட்ட கணைய அழற்சி: பல ஆண்டுகளாக வீக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளைவுகளால் நீடித்திருக்கும்.
கடுமையான கணைய அழற்சியின் அறிகுறிகள்
குமட்டல் மற்றும் வாந்தி
வயிற்று வீக்கம்
மேல் அடிவயிற்றில் வலி
காய்ச்சல்
வேகமான இதயத்துடிப்பு
வயிற்று வலி முதுகு வரை பரவுதல்
கடுமையான கணைய அழற்சிக்கான காரணங்கள்
பித்தக்கற்கள்: பெரும்பாலான கடுமையான கணைய அழற்சியின் காரணம்.
அதிக கொழுப்பு: இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு அதிகம் இருந்தால்.
மதுப் பழக்கம்: அதிகமாக ஆல்கஹால் குடிப்பவர்களுக்கு வாய்ப்பு அதிகம்.
ஆட்டோ இம்யூன் கணைய அழற்சி: உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் கணையத்தைத் தாக்குதல்.
விபத்துக்கள்: அடிவயிற்றில் காயம் ஏற்பட்டால்.
சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்: ஒரு மரபணு நோய்.
மருந்துகள்: ஈஸ்ட்ரோஜென், கார்டிகோஸ்டெராய்டுகள் மற்றும் சில ஆன்டிபயாடிக்குகள்.
நாட்பட்ட கணைய அழற்சியின் அறிகுறிகள்
வயிற்று வலி
வயிற்றுப்போக்கு
எடை இழப்பு
சர்க்கரை நோய்
நீங்கள் மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை அனுபவித்தால், உடனடியாக எங்கள் குழுவினரைத் தொடர்புகொள்ளலாம்.
DR. T. S. RAMESH KUMAR., MD., DM
GASTROENTROLOGY